scorecardresearch

சென்னை டு மதுரை: வந்தே பாரத் வேகத்தில் இதர எக்ஸ்பிரஸ் ரயில்கள்; ரயில்வே முக்கிய முடிவு

சென்னை-மதுரை ரயில் வேகத்தை 130 கி.மீ ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Decision to increase Chennai-Madurai train speed
சென்னை-மதுரை ரயில் உயர்த்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களின் ரயில் வேகத்தை மணிக்கு 130 கிமீ ஆக உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதில், தெற்கு ரயில்வேயில் சென்னை எழும்பூர்-மதுரை மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல்-கோழிக்கோடு ஆகியவை அடங்கும்.
இந்த ரயில்களின் வேகம் மார்ச் 2024க்குள் அதிகரிக்கப்படும். அதன்படி, குறைந்தபட்சம் 130 கிமீ வேகத்தில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே பெரும்பாலான ரயில்களின் வேகம் 130 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே துறை தற்போது பல்வேறு மண்டலங்களில் 53 வழித்தடங்களை தேர்வு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 130 கிமீ வேகத்தை எட்டுவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, அரக்கோணம்-மைசூர் (436 கிமீ), திருவனந்தபுரம் சென்ட்ரல்-கோழிக்கோடு (400 கிமீ), சென்னை எழும்பூர்-மதுரை (496 கிமீ), ஜோலார்பேட்டை-பெங்களூரு. (148 கிமீ), பெங்களூரு-மைசூரு (138 கிமீ), கண்ணூர்-கோழிக்கோடு (89 கிமீ), திருவனந்தபுரம்-மதுரை (301 கிமீ) மற்றும் ஜோலார்பேட்டை-கோவை (289 கிமீ) உள்ளிட்ட வழித் தடங்களில் உள்ள ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படும்.
இந்த ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்பட்சத்தில் வந்தே பாரத்துக்கு நிகரான வேகத்தை எட்டும்.

மேலும், தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 5,081 கி.மீ., வேகத்தை மேம்படுத்தும் பணி 2,037 கி.மீ.க்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Decision to increase chennai madurai train speed

Best of Express