நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் இன்று(அக்.1) முதல் அமலுக்கு வருகிறது . இதுநாள் வரை சொத்துகளைப் பதிவு செய்யும் போது நிலம், வீடுகளின் புகைப்படம் சேர்ப்பது இல்லை.
இதனால் வீடுகளைப் பத்திரப்பதிவு செய்யும் போது காலி மனை என்று கூறி பதிவு செய்கிறார்கள். இதனால் ஏற்படும் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையில் அக்.1-ம் தேதி முதல் நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவு துறை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை நிலங்களின் புகைப்படங்களை சேர்ப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் கூடுதல் பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார் கூறுகையில், "அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மற்றும் முறைகேடுகளை தவிர்க்க இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாக கூறினார்.
பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு வரும்போது சொத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சொத்தில் உள்ள கட்டடங்கள் போன்றவற்றிக்கு முழுமையான முத்திரரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தும் படி செய்வதற்கான நடவடிக்கையே இந்த புதிய நடவடிக்கை ஆகும். வருவாயை பெருக்கும் நோக்கத்துடன் அரசு முடிவு செய்துள்ளது.
பத்திரப்பதிவு நிலப் படத்தை சார் பதிவாளரிடம் கொடுத்தால் அவர் எவ்வாறு ஆவணங்களை எழுத வேண்டும் என்று வழிகாட்டுவார். பதிவுத் செய்யும் போது சொத்தில் உள்ள அனைத்து விவரங்களும் ஆவணத்தோடு சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளாத என்பதைப் பார்ப்பதுடன் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார். மனை அல்லது வீடுகளை சேர்க்கும் நடைமுறை அனைத்து சார்-பதிவாளர் அலுவலங்களிலும் பின்பற்றப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“