scorecardresearch

ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த ஜெ. தீபா: தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து பேட்டி

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது கடவுளின் கையில்தான் இருக்கிறது என்று ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த ஜெ. தீபா: தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து பேட்டி

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது கடவுளின் கையில்தான் இருக்கிறது என்று ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அதிமுக முழுவதுமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா கூறியிருந்தார். மேலும் அதற்கான வேலைகளும் செய்து வருவதாக அவர் கூறினார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினர் அவர்களது வேட்பாளரை நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் சார்ப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்தை ஜெ. தீபா சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “ குடும்ப நிகழ்ச்சிக்காக அவரை அழைக்க வந்துள்ளேன். அரசியலைத்தாண்டி அவரை எனக்கு தெரியும் என்பதால் அவரை அழைக்க வந்திருக்கிறேன். இனி நான் அரசியலுக்கு வருவது கடவுளின் கையில்தான் இருக்கிறது.” என்று அவர் கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Deepa meets ops and says god will decide about politics