scorecardresearch

அத்தை இருந்தவரை அதிமுக இருந்தது… இப்போது கட்சியே இல்லை: ஜெ.தீபா

அதிமுக-வை பிரிக்க என்ன இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியே இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

அத்தை இருந்தவரை அதிமுக இருந்தது… இப்போது கட்சியே இல்லை: ஜெ.தீபா

அதிமுக-வை பிரிக்க என்ன இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியே இல்லை  என்றுதான்  கூற வேண்டும் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி போயஸ் இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு ஜெ.தீபா பேசும்போது, “ஆறுமுகசாமி அறிக்கையின் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுகவில் 4  அணிகள் எல்லாம் இல்லை. 4 பேர் தான் இருக்கிறார்கள். அவர்கள் அதிமுகவிலேயே இல்லை. அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டனர். ஜெயலலிதா இருக்கும் வரைதான் கட்சி நன்றாக இருந்தது. இப்போது அதிமுக என்று ஒன்று இல்லை. 100 நாட்கள் கூட தாங்கமாட்டார்கள். நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. இங்கே நடைபெறும் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை “ என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Deepa says no admk is there