Advertisment

ஆதரவாளர்கள் ஊர்வலத்தால் திணறிய நெல்லை... தீபக் ராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

பாளையங்கோட்டையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா உடல் ஆம்புலன்ஸில் அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லும்போது, அவருடைய ஆதரவாளர்கள் இரு சக்கர வாகனங்கள், கார்களில் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஊர்வலமாக சாலையில் சென்றதால் நெல்லை திணறியது.

author-image
WebDesk
New Update
deepak raja funeral
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா (30). இவர் கடந்த திங்கள்கிழமை தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கே.டி.சி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது, அப்போது அங்கே வந்த ஒரு கும்பல், அவரை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. காதலில் கண் முன்னாலே, கொடூரமாக வெட்டப்பட்டு, தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

தீபக் ராஜா படுகொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

தென் மாவட்டங்களில் சாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2016-ல் நடந்த இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம், தாழையூத்தில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தீபக் ராஜா, கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, தீபக் ராஜா கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையில் பிரபல ரவுடி லெஃப்ட் முருகன், நவீன் இருவரும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.  இந்த கொலை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தீபக் ராஜாவின் உடல் உறவினர்களால் பெற்றுக் கொள்ளப்படாமல் 7 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தீபக் ராஜாவின் உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தீபக் ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வதற்கு அவருடைய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்கு அடுத்து, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தீபக் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதையடுத்து, தீபக் ராஜாவின் உடலை திருநெல்வேலியில் இருந்து வாகைகுளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.

தீபக் ராஜாவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சுமார் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் தீபக் ராஜாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். 

தீபக் ராஜாவின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், அரசியல் இயக்க நிர்வாகிகள் புடைய  சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க நான்கு மணி நேரம் ஆனது. இதனால், நெல்லையே திணறியது. தீபக் ராஜாவின் ஆதரவாளர்கள் பெரிய அளவில் திரண்டதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். தீபக் ராஜாவின் ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 500 போலீசார் உடன் சென்றனர்.

ஆதரவாளர்கள் புடைசூழ தீபக் ராஜா உடல் அவருடைய சொந்த ஊரான வாகைக்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே தீபக் ராஜா உடலுக்கு அவரது ஆதரவாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தீபக் ராஜா உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. தீபக் ராஜா உடலுடன் புரட்சியாளர்கள் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ,  தமிழரசன் ஆகியோரின் புத்தகங்களை வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

இதனால், நெல்லையில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், சுமார் 2000 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nellai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment