scorecardresearch

தீபாவளி பண்டிகை: சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வெளியூர் செல்வதற்கு சென்னையில் இருந்து அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையிலும், அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Tamil news
Tamil news updates

தீபாவளி பண்டியை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, மிண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக, சென்னையில் இருந்து அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையிலும், அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 24-ம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி) சென்னையில் 6 இடங்களில் இருந்து மாநிலம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பிற மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பயணிகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவும் பண்டிகை முடிந்த பிறகு, மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக சென்னையில் இருந்து அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையிலும், அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த ஆறு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல பயணிகளுக்கு வசதியாக இணைப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Deepavali special buses operates from 6 places in chennai