மகிளா காங்கிரஸ் பேரணிக்கு தலைமை வகித்த மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, துணைத்தலைவி நிஷா ஆகியோர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க அளித்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் கடந்த வாரம் மகிளா காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது.
மகிளா காங்கிரஸ் பேரணிக்கு தலைமை வகித்த மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, துணைத்தலைவி நிஷா ஆகியோர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அசோக்பாபு எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க-வினர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் போலீசார் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”