Advertisment

எம்.பி. பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த திமுகவின் அவதூறு வழக்கில் வைகோ விடுதலை...

குற்றசாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை - நீதிபதி கருணாநிதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Defamation case against Vaiko

vaiko, வைகோ

Defamation case against Vaiko : தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.  கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த மு. கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார்.  அதை தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

Advertisment

அவதூறு வழக்கிலிருந்து  வைகோவை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில்,  இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக வைத்து வழக்கு

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில், வைகோ, கருணாநிதியை குற்றம்சாட்டி பேசிய செய்தி வெளியானது. அந்த செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் தலைமை செய்தியாளர், வெளியீட்டாளர்களிடமும்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்தும் முடிவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு இன்று தள்ளிவைக்கபட்டது.  இன்று இவ்வழக்கு நீதிபதி கருணாநிதி முன் தீர்ப்புக்கு வந்தது. அப்போது வைகோவின் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். அதைக் கூறி வைகோ தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு தரவேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அளித்த தீர்ப்பில் வைகோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வைகோவை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

பத்திரிகை செய்தியை தவிர்த்து வேறு எந்த ஆதாரங்களையும் அரசு தரப்பில் இருந்து இந்த வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்றும். செய்தியை எழுதிய நிருபரை காவல்துறை விசாரிக்கவில்லை என்றூம் கூறிய அவர், அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.  குற்றசாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.  எனவே சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டபட்டவருக்கு அளித்து வழக்கில் இருந்து வைகோவை விடுதலை செய்வதாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்க : மிஸ்டர் வைகோ எங்களுடைய காங்கிரஸ் ஓட்டுகளை திரும்ப கொடுத்துவிடுங்கள்

Tamilnadu Mdmk Chief Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment