அவதூறு வழக்கை ரத்து செய்ய வழக்கு : விஜயகாந்துக்கு நீதிபதிகள் கண்டனம்!

கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது

corona virus live updates, covid 19 cases
dmdk leader Vijayakanth

defamation case against dmdk leader Vijayakanth high court condemns : தனக்கெதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை திரும்பப் பெற கோரிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  கடந்த 2012ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

குடிபழக்கத்தில் இருந்து மீண்ட விஷ்ணு விஷால்

இதையடுத்து, மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது எனவும் மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள!

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Defamation case dmdk leader vijayakanth high court condemns case withdraw procedure

Next Story
குடியரசு தின அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com