பெண் போலீசார் குறித்து யூ டியூப் தளத்தில் அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அப்போது கோவையில் சிறையில் சவுக்கு சங்கரின் கை உடைக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே யூ டியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவினரிடைய கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் செய்த வழக்கு விசாரணைக்காக திருச்சி அழைத்துச் செல்லப்படுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“