திங்கள்கிழமை கோவை வரும் மோடி; மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஒத்திகை

நாளை (மார்ச் 18, 2024) பிரதமர் நரேந்திர மோடி கோவை மாநகருக்கு வருகிறார். இதனால், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

நாளை (மார்ச் 18, 2024) பிரதமர் நரேந்திர மோடி கோவை மாநகருக்கு வருகிறார். இதனால், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

author-image
WebDesk
New Update
Do you know the details of the parties that attended PM Modi's rally in Tiruppur

பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து கோவையில் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் ஒத்திகை நடத்தினர்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையிலான பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு 24 மணி நேரமும் காவல்துறை ரோந்து வாகனங்கள் சென்று வருகின்றனர்.

Advertisment

மேலும் கண்காணிப்பு கேமராக்களும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடைய பிரதமர் வருகையொட்டி இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் அங்கிருந்து காரில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு சாய்பாபா கோவில் சந்திப்புக்கு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சாய்பாபா கோவில் சந்திப்பிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரை ரோட் ஷோவில் கலந்து கொள்ளும் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், தமிழ்நாடு காவல்துறை வாகனங்களும் அணிவகுத்து சென்றன.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: