/tamil-ie/media/media_files/uploads/2023/02/police-1-3.jpg)
Police
உபா சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தடை செய்து உத்தரவிட்டது. இவ்வமைப்பின் செயல்பாடுகளை 5 ஆண்டுகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
இந்தநிலையில், நேற்றைய தினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட எட்டு அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி யு.ஏ.பி.ஏ நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் கோவை மாநகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் நேற்று (மார்ச் 21) இரவு தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
ஏற்கனவே கோவை நகரில் கார் சிலிண்டர் வெடி விபத்து, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் என குற்றச் செயல்கள் அதிகரித்ததால் இம்மாதிரியான சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.