டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை 2024 மே மாதம் 9-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக் வீடு அவர் தொடர்புடைய இடங்கள், அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களிலும் ஏப்ரல் 9ஆம் தேதி அமலாக்கத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக்குக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அந்த உத்தரவில் தனிநபர் ஜாமின் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“