தொகுதி மறுவரையறை: சித்தராமையா, ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக குழு அழைப்பு

தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்.பி அழைப்புவிடுத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delimitation Row TN GOVT officials meet karnataka Andhra pradesh party siddaramaiah YS Jagan Mohan Reddy Tamil News

முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி, தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ்-க்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்புவிடுத்தனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க் கட்சி, ஆளும் கட்சி முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்திற்கு வரும் 22 ஆம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன்படி, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் அடங்கிய தமிழக குழு பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ளது. அதன்படி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நெட்டிற்று செவ்வாய்க்கிழமை ஒடிசா மாநிலத்திற்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச புவனேஸ்வர் சென்றனர். அங்கு, ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில் அவர் அழைப்பை ஏற்றார். 

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்.பி அழைப்புவிடுத்தனர். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ்-க்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்புவிடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு  தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது. 

Advertisment
Advertisements
Siddaramaiah Jagan Mohan Reddy Tamil Nadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: