30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள 270 கிராமங்கள் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது

By: Updated: August 4, 2020, 03:57:53 PM

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களுkகு 15 நாட்கள் முன்பாகவும், கடைமடை பாசன பகுதிகளுக்கு 25 நாட்களுக்கு முன்பாகவும் பாசன நீர் வந்தடைந்தது.

இந்த ஆண்டில் டெல்டா பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு 3.87 லட்சம் ஏர்க்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளாது. 30 ஆண்டுகளில் இது தான் அதிகபட்ச பரப்பில் செய்யப்படும் குறுவை சாகுபடிஆகும். 2019ம் ஆண்டில் இதைவிட ஒரு லட்சம் ஏக்கர் குறைவாக, அதாவது 2.80 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை விவசாயம் செய்யப்பட்டது. இதன் மூலம் 6.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூழ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள 270 கிராமங்கள் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் மற்றும் வேளாண் இயக்குநர் தக்‌ஷணா மூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

8 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். கடந்த 8 ஆண்டுகளாக- குறிப்பாக, 2016- இல் 20.9.2016; 2017 இல் – 2.10.2017, 2018 இல் – 19.7.2018, 2019இல் – 13.8.2019 என மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Delta districts cultivate kuruvai crops in 3 87 lakhs acre this year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X