டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் இன்று அதி கனமழை பெய்யும் எனவும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட தகவலை தங்கள் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 130 க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“