தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவையிலிருந்து செல்வதாகவும்,எனவே கோவை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும் என வியாபிரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேவாரத்னா எம். ஆர்.எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஏ.எஸ் .எம் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கொடியை ஏற்றி வைத்து காந்தி படத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திறந்து வைத்தனர்..
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் பேசுகையில்,வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான முறையில் வணிகம் செய்வதற்கு தேவையான வழிமுறைகளை எடுத்து கூறினார்..
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது..
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேவாரத்னா எம்.ஆர்.எம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவையிலிருந்து செல்வதாகவும்,எனவே கோவை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”