எங்கள யாரும் அடிக்க முடியாது.. மத்திய அரசுக்கு தி.மு.க எச்சரிக்கை.. பரபரக்கும் போஸ்டர்!

திமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

திமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

author-image
WebDesk
New Update
Demonstration against DMK in Coimbatore

கோவையில் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டர்கள்

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திக பொதுச்செயலாளர் கி. வீரமணி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் டி ஆர் பாலு, ராசா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பலர் பங்கேற்கின்றனர்.

Advertisment

இன்று மாலை சிவானந்த காலனி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் "திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை…"

எனவும் மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய "எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது" என மத்திய அரசை குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மிசா வழக்கின் போது எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk V Senthil Balaji Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: