செய்தியாளர் பி.ரஹ்மான்
PFI மற்றும் அதன் துணை அமைப்புகளான 8 அமைப்புகள் தடை செய்யப்பட்டதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் அந்த அமைப்புகளை சேர்ந்த பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நாடு முழுவதும் PFI மற்றும் அதன் துணை அமைப்புக்கான உள்ளிட்ட 8 அமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடைவீடு உள்ளது. இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை உக்கடம் பகுதியில் உள்ள PFI அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால் உட்பட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் , உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக மத்திய அரசை கண்டத்து ஆர்ப்பாட்டம் நடத்த PFI - அமைப்பினை சேர்ந்த பெண்கள் திரண்டனர். PFI - அமைப்புகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் எச்சரித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/PFI-covai-sdbi.jpg)
அமைப்பு தடைசெய்யப்பட்டு இருக்கும் நிலையில் போராட்டம் நடத்தினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறி போராட்டத்திற்கு வந்த பெண்களை போலீசார் எச்சரித்தனர். அப்போது அவர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய படி தெற்கு உக்கடம் பகுதியில் சிறிய தூரம் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல் துறை சமரசப்படுத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர்.
இதனிடையே உக்கடம், ஆத்துப்பாலம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“