என்.எல்.சி.க்கு எதிரான போராட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Denial of permission to protest in front of corporate office of NLC

என்.எல்.சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு

என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பட்டாளி மக்கள் கட்சி நடத்திய முற்றுகை போராட்டம், வன்முறையாக மாறியது. போலீசார் தடியடி மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

Advertisment

அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி. சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தியது.
ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
முன்னதாக, என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்தது. மேலும் பல காவலர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: