அண்ணாத்த படத்தின் டிக்கெட் கேட்டு ரகளை… தியேட்டர் ஜன்னலை உடைத்த மர்மநபர்கள் மீது வழக்கு

Tamil Cinema Update : டந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான அண்ணாத்த படம் வெளியானது.

Denied Annaatthe Ticket gang breaks theatre window : அண்ணாத்த படத்தின் டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை சென்னை கோயம்பேடு காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டியை கோலகலாமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான அண்ணாத்த படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படத்திற்கு முதல்நாளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 4) சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கு ஒன்றில், அண்ணாத்தே’ படத்துக்கான டிக்கெட் கிடைக்காததால் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தியேட்டர் ஹாலின் ஜன்னலை உடைத்துள்ளனர். இரவு 11 மணியளவில் தியேட்டருக்கு வந்த அவர்கள், டிக்கெட் கேட்டுள்ளனர். ஆனால் தியேட்டரில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது என்று கூறி ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் தியேட்டரை விட்டு வெளியே செல்லுமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு வாக்குவதம் முற்றிய நிலையில், சிறிது நேரம் கழித்து, வெளியில் சென்ற அவர்கள், தியேட்டரின் ஜன்னல் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தியேட்டர் மேலாளர் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் (சிஎம்பிடி) போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தியேட்டர் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Denied annaatthe ticket gang breaks theatre window in koyambedu

Next Story
எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிரான மனு : தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express