சென்னையை கலக்கிய பாலியல் தாதா டெய்லர் ரவி கைதுக்கு உதவிய பெண்!

ஒவ்வொருவருக்கும் 60க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள்

ஒவ்வொருவருக்கும் 60க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெய்லர் ரவி

டெய்லர் ரவி

சென்னையில் மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய  பாலியல் தாதா டெய்லர் ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

பாலியல் தாதா டெய்லர் ரவி:

சென்னையில் பார்லர், மசாஜ் செண்டர், ஸ்பா என்ற பெயரில்  விபச்சாரம் நடைப்பெற்று வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதுகுறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.  அவர்களின் அதிதீவிர முயற்சியால்  பெண்களை விபச்சாரத் தொழிலில் ஈடுப்படுத்திய பாலியல் தாதா டெய்லர் ரவி மற்றும்  அவரின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை போலீசார்,  அண்ணாநகரில்  வசிக்கும் பெண் ஒருவரின் துணையுடன் பிடித்துள்ளனர்.பாலியல் தொழிலில் கன்னட பிரசாத்துக்கு இணையாக ஈடுபட்டவர்  டெய்லர் ரவி.இவரின் செல்போனை ஆய்வு செய்ததில் 15க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், இவருடன் தொடர்பில் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நாள் மற்றும் முன்நாள் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இதில் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் டெய்லர் ரவி மற்றும் பூங்கா வெங்கடேசை  கைது செய்தே ஆக வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த வேட்டையில் கடந்த 8 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவி வந்த டெய்லர் ரவி கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் போலீஸ் தங்களை சுற்றி வளைத்துவிட்டதை அறிந்த பூங்கா வெங்கடேசன் மற்றும் சில புரோக்கர்கள் தப்பித்து விட்டனர்.

இருப்பினும் அவர்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  10க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள், 1 துணை ஆணையர் ஆகியோர் அடிக்கடி டெய்லர் ரவியை தொடர்புகொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெய்லர் ரவி போல மேலும் 4 பேர் இதே தொழிலை செய்து வருவதாகவும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 60க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A K Viswanathan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: