சென்னை நகரப் பகுதியில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 81 ஆயிரம் பார்சல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இந்த பார்சல் விநியோகத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக, ஒரே நாள் டெலிவெரி மற்றும் ஓ.டி.பி பாஸ்வேர்ட் டெலிவெரி போன்ற திட்டங்களை இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்ய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
சி.சி.ஆர் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன் கூறுகையில், "சர்வதேச நாடுகளுக்கும் கூட பார்சல்களை வழங்குவதற்காக, சிறு அளவிலான சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் இத்துறை ஏற்கனவே கூட்டு சேர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
"முக்கிய சில்லறை வணிகச் சங்கிலிகளுடன் அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறோம். மேலும், சிறந்த தளவாட ஆதரவிற்காக நாடு முழுவதும் பரவியுள்ள 1.64 லட்சம் அஞ்சல் அலுவலகங்களின் பரந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
சரவணா ஸ்டோர்ஸின் இ - காமர்ஸ் தளமான அண்ணாச்சியுடன் இணைந்து, இந்தியா முழுவதும், குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு பார்சல் சேவையை வழங்க சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய கூட்டாண்மைகள் டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும். மேலும், உள்ளடக்கிய இ - காமர்ஸ் வளர்ச்சியை செயல்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இ - காமர்ஸ் தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 10,872 பார்சல்கள் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், சென்னையில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இ - காமர்ஸ் தளங்களுடன் இணைவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த வசதி, பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அஞ்சல் துறையானது, கடன் வசதி, பிக் - அப் சேவைகள் மற்றும் சரக்கு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்கி வருகிறது. "போர்டலில் ஒரு நாளைக்கு நான்கு முறை சரக்கு கண்காணிப்பு வசதியை நாங்கள் அப்டேட் செய்கிறோம்" என்று நடராஜன் கூறினார். விநியோகம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது.