முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் துறைகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளராக பதவி வகித்து வரும் அனு ஜார்ஜ் 136 நாள்கள் விடுப்பில் செல்ல இருக்கிறார். இதனால், நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, முதலமைச்சரின் தனிச் செயலாளராக உள்ள உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு தனிச் செயலாளராக பதவி வகிக்கும் சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் இணைச் செயலாளரான லட்சுமிபதிக்கு சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகியவற்றை சேர்த்து 12 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“