தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. இது நாளை (அக். 17) சென்னை அருகே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 12 கி.மீ ஆக சற்று அதிகரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.17) அதிகாலை புதுச்சேரி – நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும், சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 360 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“