தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 22-ம் தேதி, மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22-ம் தேதி உருவாக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து 24-ம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் நாளை(மே 19) மற்றும் நாளை மறுநாள் (மே 20) அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தொடர்ந்து இன்று (மே 18) காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/4CAzrEkgEq6b5pLfOdng.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“