யார் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற விவாதத்திற்கு அழைக்கும் எடப்பாடி பழனிசாமி, என்னை அழைத்தால் நான் தயாராக இருக்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் வீரர், வீராங்கனைகளுக்கு 'சாம்பியன்ஸ் கிட்' உதவி பொருட்கள் தொகுப்பினை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக ராணிப்பேட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க நான் தயார் உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக எழுந்த கேள்விக்கு பதிலளித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக நேற்று ‘யார் ஆட்சியில் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என விவாதிக்க தயாரா?’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு இன்று பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “என்னை அழைத்தால் விவாதிக்க தயார்” என பதில் அளித்தார்.
அதேபோல் அரசுத் திட்டங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை வைப்பது பற்றிய இபிஎஸ் விமர்சனத்துக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வேறு யாருடைய பெயரை வைக்க வேண்டும்?” என கேள்வியெழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“