Advertisment

ஸ்டாலின், உதயநிதி பற்றி அவதூறு: பொதுக் கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்த அ.தி.மு.க மா.செ

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுக் கூட்டம் நடத்தி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு வருத்தம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Kallakurichi ADMK Kumaraguru.jpg

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி பகிரங்க மன்னிப்பு கேட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நேற்று அதே இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தி  வருத்தம் தெரிவித்தார். 

Advertisment

கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் கடந்த மாதம் 19-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், 
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும் இதை கண்டித்தும் மாவட்டம் முழுவதும்  உள்ள காவல் நிலையங்களில் குமரகுரு மீது திமுகவினர் புகார் அளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து முன் ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில்,  நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மந்தவெளியில், அதிமுக மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, “முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து நான்அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைதளங்கள் வாயிலாக நான் தெரிவித்திருந்தேன்.

இப்போதும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவ்வாறு புண்படும்படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். தொடர்ந்து அதிமுக கட்சி யாரையும் எப்போதும் புண்படுத்தாது என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Aiadmk Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment