மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் மக்களுக்கு இனிப்புகளை அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த 'கேப்டன்' விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "தே.மு.தி.க தலைமை அலுவலகம் இனி 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும். புதிதாக யூடியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“