525 கோடி ரூபாய் நிதி மோசடி புகாரில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர், தேவநாதன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் 100 ஆண்டுகளாக மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், தனியார் தொலைக்காட்சி உரிமையாளருமான வேதநாதன் இருந்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர், நிரந்தர வைப்புத்தொகை செலுத்தி இருந்தனர். முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 11 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. முதலீடு செய்த பணத்தில் 525 கோடி ரூபாயை நிதி நிறுவனம் திருப்பதித் தர மறுத்ததாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 150க்கும் அதிகமானோருக்கு வழங்கிய காசோலை, பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இந்த நிதி மோசடி தொடர்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.