‘மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும்’ : போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்தில் பலர் கைது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை உட்பட பல அமைப்பினர் நீண்ட நாட்களாகவே…

By: February 20, 2019, 11:11:39 AM

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்தில் பலர் கைது.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை உட்பட பல அமைப்பினர் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி போராட்டம்

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுதல், ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்தில் முத்துராமலிங்கம் என்ற பெயரை மாற்றி அவரது முழு பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அச்சிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தேவர் அமைப்பினர் மதுரை நகரில் ஒரு நாள் அடையாள பந்த் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து, மதுரை விமானநிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பெரும் அளவிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று ஆங்காங்கே திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்ட தேவர் அமைப்புகளை சேர்ந்த தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுரை ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயில் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Devar communities demand madurai airport to be named after pasumpon muthuramalinga devar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X