கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உலா வந்த காட்டு யானையின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி மலை அமைந்து உள்ளது. இங்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒற்றைக் காட்டு யானை உலா வந்தது.
நேற்று (நவ 30) அமாவாசை தினத்தை முன்னிட்டு 60-க்கும் மேற்பட்டோர் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வருகை தந்தனர். அப்போது இரவு 7 மணி அளவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் அருகே ஒற்றை காட்டு யானை வந்தது.
இதைப் பார்த்ததும் அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். மேலும், வனத் துறையினர் அப்பகுதிக்கு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒற்றை காட்டு யானை அங்கு உள்ள கடைகளை உடைத்து அங்கு வைத்து இருந்த பொருள்களை எடுத்து சாப்பிட முயன்றது.
இதையடுத்து யானை மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. இதனால், பக்தர்கள் பாதுகாப்பாக திரும்பிச் சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“