ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியைவிட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 4.9 ஹெக்டேரில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், 105 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 மாவட்டங்களில் 190 ஹெக்டோ் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரா்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக 987 ஹெக்டோ் பரப்பளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை நடத்திய பல்வேறு விஞ்ஞானபூா்வ ஆய்வுகள், குறிப்பாக செயற்கைக்கோள் படங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலமாக இந்த முறைகேடுகளை உறுதி செய்துள்ளது.
இதன் வாயிலாக, 4,730 கோடி ரூபாய்க்கு மணல் விற்பனை நடந்துள்ளது. இருந்தும் 36.45 கோடி ரூபாய் வருவாய் தான் காட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மணல் கொள்ளை தொடா்பாக ஒப்பந்ததாரா்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரா் சண்முகம் ராமசந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீா்செல்வம் கரிகாலன் உள்ளிட்டோரின் 35-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
எனவே கூடுதலாக மணல் அள்ளி, மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மிகப்பெரிய அளவில், வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்குமாறு, வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி., விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“