திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
இதையும் படியுங்கள்: மோடி தலைமையில் ஜி20 ஆலோசனை கூட்டம்; இ.பி.எஸ்-க்கு அழைப்பு
உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கீழ்கண்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இதன்படி, திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக எதிர் மனுதாரருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.
முக்கிய வழக்குகளில் இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை) உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு டி.ஜி.பி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil