கோவை நகரின் உணர்வையும் தொண்டுள்ளத்தையும் கொண்டாடும் விதமாகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்திற்கு உதவும் வகையில் சி.சி.எஃப் (கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன்) மாரத்தான் போட்டி நேற்று (டிசம்பர் 11) நடைபெற்றது.
கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கியது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து சைலேந்திரபாபு மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார்.

20 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ஓடினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/