இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவில் திருவிழாக்கள் மற்றும் விழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
Advertisment
அதில், “பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்த கூடாது” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்க கூடாது என்றும் இரட்டை அர்த்த பாடல் நிகழ்ச்சியில் இடம்பெற கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு
மேலும் 7 நாள்களுக்குள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், “அனுமதி கோரிய மனுவின் மீதான முடிவினை 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு 7 நாள்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“