தற்போது பிரபலமாக நடக்கும் நெட் பேங்கிங் மோசடி குறித்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கூறியது: "பல்வேறு விதமான இணைய மோசடிகள் நடந்துகொண்டு இருக்கிறது. அத்தகைய மோசடிகளில் நீங்கள் ஏமாந்து விட கூடாது என்று காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தற்போது புதிதாக வந்திருக்கும் 'நெட் பேங்கிங்'அக்கௌன்ட் மோசடி, உங்கள் கைபேசிக்கு "வாடிக்கையாளர் கவனத்திற்கு, உங்களது எஸ்.பி.ஐ. நெட் பேங்கிங் அக்கவுண்ட் இன்றுடன் செயல்படாது. இதை செயல்படுத்துவதற்கு உங்களது பேன் நம்பரை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-இல் செலுத்துங்கள்", என்று ஒரு மெசேஜ் வரும் வாய்ப்பு உள்ளது.
அந்த லிங்க்-இல் உங்களது பெயர், பாஸ்வர்ட், ஏ.டி.எம்.இன் தகவல் மற்றும் ஏனைய விவரங்களை கேட்பார்கள், அதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு மோசடி செய்து வருகின்றனர்", .என்று கூறினார்.
மேலும், இந்த வகையான மோசடி பல வருடங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. மீண்டும் இது அரங்கேறுகிறது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil