scorecardresearch

மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல; மெத்தனால் – டி.ஜி.பி

மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

DGP sylendrababu statement, Sylendrababu says What sold in Marakkanam and Chithamur not fake Liquor, factory uses Methanol, மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால் - டி.ஜி.பி சைலேந்திரபாபு, DGP sylendrababu, Marakkanam and Chithamur, fake Liquor death
மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில், மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் நாட்டையே உலுக்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில், இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும் ஆலைகளிகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச் சாராயம் என்பது தெரியவந்தது.

இந்த மெத்தனால் என்ற விஷச் சாராயம் ஓதியூரைச் சேர்ந்த சாராய வியபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் அவர் முத்து என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளதாகவும் முத்து பாண்டிச்சேரி ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது போல, சித்தாமூர், பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச் சாராய விற்பனை செய்த ‘அமாவாசை’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தியதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் ஓதியூர் வேலு, அவர் தம்பி சந்திரன் என்பவரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். வேலு என்பவர் பனையூர் ராஜேஷ் என்பவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார். இவர் மேற்படி விஷச் சாராயத்தை விளம்பூர் விஜி என்பவரிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜி, விஷச்சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார். ஆக சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச் சாராயமும் மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச் சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது என புலனாகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,40,649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,39,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37,217 லிட்டர் விஷச் சாராயம் கைப்பற்றப்பட்டு 2,957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும் அண்டை மாநிலங்களுக்கு கள்ளச் சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து விஷச் சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச் சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dgp sylendrababu statement what sold in marakkanam and chithamur not fake liquor it factory uses methanol

Best of Express