/tamil-ie/media/media_files/uploads/2020/01/hc1-1.jpg)
tamil film producer council election
வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால் தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
இந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதே, மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்திருந்தால் மட்டுமே அந்த மனு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அதேசமயம், வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும், அந்த இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாது எனக் கூறி, அந்த வழக்குகளை முடித்து வைத்தார்.
இதற்கிடையில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை பொய்யான காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் நடத்தாமல் இருந்ததாக கூறி அதனை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் தொடர்ந்திருந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து நாளை விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.