கோயில்களில் யார் யார், எங்கு நின்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு மரபு உள்ளது என தருமபுரம் ஆதீனகர்த்தர் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு;
நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தியாகேசர் பெருமானுக்கு முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் ஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று வழிபட்டார்.
பின்னர், தருமபுரம் ஆதினம் ஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் தரிசனம் தொடர்பான விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம் என இசையமைப்பாளர் இளையராஜாவே சொல்லிவிட்டார். யார், யார் எங்கு நின்று வழிபாடு நடத்த வேண்டும் என்பது ஒரு மரபாக இருக்கிறது. அந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த எனக்கு, இங்குள்ள சிவாச்சாரியார்தான் பிரசாதம் வழங்கினார். ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உள்ளது என தருமபுர ஆதீனகர்த்தர் ஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கூறினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“