Dharmapuri Election Results 2024 Live Update: தருமபுரி மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தருமபுரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவில் முதல் 2 சுற்றுகளில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் சரிவை சந்தித்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணிகை தொடங்கியது முதலே பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். ஆனால், மாலை 4 மணிக்கு மேல் நிலைமை தலைகிழாக மாறியது. சௌமியா அன்புமணி வாக்கு எண்ணிக்கையில் சரிவை சந்தித்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 4,32,667 வாக்குகள் பெற்று 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2-வது இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க வேட்பாளர் அசோகன் 293629 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 65381 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் இருந்து முன்னிலை வைகித்து வந்த சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று பா.ஜ.க கூட்டணி எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக திடீர் சரிவை சந்தித்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி பின்னடைவு
பிற்பகல் 3 மணி நிலவரப்படி: 17 சுற்று வாக்கு எண்ணிக்கையில், தருமபுரி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் 3,41,827 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
காலை முதல் முன்னிலை வகித்து வந்த பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,23,583 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து 2வது இடத்தில் உள்ளார்.
மதியம் 1 மணி நிலவரப்படி: தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் 1,74,910 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 1,60,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
சௌமியா அன்புமணி 14,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காலை 10 மணி நிலவரப்படி: பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 24,788 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 15,250 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
வட தமிழகத்தில் உள்ள தருமபுரி மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில், அதில் இருந்த சில தொகுதிகளையும், வந்தவாசியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தருமபுரி மக்களவைத் தொகுதியானது, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஆகும்.
தருமபுரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,12,732; ஆண் வாக்காளர்கள்: 7,64,878 பெண் வாக்காளர்கள்: 7,47,878 மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 176 ஆவர். 2024 மக்களவைத் தேர்தலில் 1238184 வாக்குகள் பதிவாகி 81.20 சதவீதம் வாக்குகள் பதி வாகி உள்ளன.
2024 மக்களவைத் தேர்தலில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தருமபுரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் ஏ. மணி உதயசூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க சார்பில் டாக்டர் ஆர். அசோகன் இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் சவுமியா அன்புமணி மாம்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா மைக் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியின் வரலாறு:
தருமபுரி மக்களவைத் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரூர் (தனி), மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாலக்காடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தருமபுரிமக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளனர்.
15வது மக்களவைத் தேர்தல் (2009)
2009-ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இரா. தாமரைச்செல்வன் 365,812 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஆர். செந்தில் 2,29,870 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட வி. இளங்கோவன் 1,03,494வாக்குகள் பெற்றார்.
16 வது மக்களவைத் தேர்தல் (2014)
2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 4,68,194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட,
அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பி.எஸ். மோகன் 3,91,048 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதே போல, தி.மு.க சார்பில் போட்டியிட்ட இரா. தாமரைச்செல்வன் 1,80,297 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வாழப்பாடி ராம சுகந்தன் 15,455 வாக்குகள் பெற்றார்.
17-வது மக்களவைத் தேர்தல் (2019)
2019-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் 5,74,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 5,04, 234 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட பெ. பழனியப்பன் 53,655 வாக்குகள் பெற்றார். நா.த.க சார்பில் போட்டியிட்ட ருக்குமணி தேவி 19,674 வாக்குகள் பெற்றார். ம.நீ.ம சார்பில் போட்டியிட்ட ராஜசேகர் 15,614 வாக்குகள் பெற்றார்.
18-வது மக்களவைத் தேர்தல் (2024
இந்நிலையில், 18-வது மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் ஏ. மணி வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க சார்பில் டாக்டர் ஆர். அசோகன் போட்டியிட்டுள்ளார்.
பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.