/tamil-ie/media/media_files/uploads/2020/09/Webp.net-compress-image.jpg)
Dharmapuri DSP dies on his birthday
Dharmapuri DSP dies: தருமபுரி டிஎஸ்பி எஸ்.ராஜ்குமார், தன்னுடைய 57-வது பிறந்தநாளில் கார்டியாக் அரெஸ்ட் பிரச்சனையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இறுக்கமான வாழ்க்கைமுறை வயது வித்தியாசம் இன்றி அனைவரின் உடல் மற்றும் மனநிலையைப் பெரிதும் பாதிக்கிறது. லைம்லைட்டில் வாழும் பிரபலங்கள் முதல் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தக் கஷ்டப்படும் சாமானிய மக்கள் வரை தற்போதைய காலகட்டத்தில் 'ஸ்ட்ரெஸ்' என்ற கொடியநோய் தொற்றிக்கொண்டுள்ளது. பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவி முதல் கோலிவுட் பிரபல நடிகரும் மருத்துவருமான சேதுராமன் வரை 'கார்டியாக் அரெஸ்ட்' எனும் ஒரு வகையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள்தான்.
அந்த வரிசையில் குடும்பத்துடன் ஆனந்தமாய் தன் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற தருமபுரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.ராஜ்குமாருக்கு, திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"வேலையில் இருந்து திரும்பிய பிறகு, அவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டார். அதன்பிறகு தூங்கச் சென்றவர் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். மருத்துவமனைக்கு அனைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது" என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் மற்ற அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை டி.எஸ்.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.