/tamil-ie/media/media_files/uploads/2023/03/po-1.jpg)
பொம்மன்- பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழந்துள்ளது.
தருமபுரியில் உள்ள வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானை கிணற்றில் விழுந்தது. இந்நிலையில் வனத்துறையினர் மற்றும் ஆஸ்கர் விருது வென்ற யானை பராமரிப்பாளர் பொம்மன், அங்கு சென்று யானையை மீட்டார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இந்த குட்டி யானை முதுமலை யானை காப்பகத்திற்கு வந்தடைந்தது.
இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பு பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் உதவி கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆலோசனைப்படி யானைக்கு திரவ உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் யானைக்குடிகளுக்கு மனிதன் சாப்பிடும் லாக்டோஜன் வகை உணவு கொடுக்கப்படுகிறது. இந்த உணவு குட்டியானைகளுக்கு செரிமாணம் ஆனால், அவை விரைவாக மீண்டு வந்துவிடும். இந்நிலையில் தர்மபுரி குட்டியானை-க்கு தாய் பால் இல்லாத நேரத்தில், அதற்கு பதிலாக கொடுக்கப்பட்ட உணவு செரிமாணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு சோர்வாக காணப்பட்ட யானை நள்ளிரவு 1 மணிக்கு மரணமடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளார். ஆஸ்கர் பரிசு வென்ற பொம்மன் – பெள்ளி பராமரிக்கும் இந்த யானையை காண பிரதமர் மோடி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.