தமிழகத்தில் தருமபுரியில் மொரப்பூர் அருகே ஒரு கிராமத்தில், செவ்வாய்க்கிழமை இரவு ஒரு இளம் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், வழக்கத்திற்கு மாறாக, இளைஞனின் தாய் பணயக்கைதியாகி உள்ள நிலைமைக்கும் வழிவகுத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Inter-caste love story has a hiccup: Girl’s parents take away boy’s mother with them to force couple to return
உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறை இருதரப்பையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தில் ஒரு ட்விஸ்ட்டாக, அந்த பெண்ணின் உயர்சாதி பெற்றோர்கள், அந்த இளைஞனின் தாயான எஸ்சி பெண்ணை பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது அவர்கள் தலைமறைவாக இருக்கும் ஜோடியை வெளியே வர வைக்கும் என்று நம்புகிறார்கள்.
இப்போது இரண்டு போலீஸ் குழுக்கள் அந்த இரண்டு தரப்பையும் தேடுவதில் ஈடுபட்டுள்ளன - ஒரு குழு திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய ஜோடியைக் கண்டுபிடிப்பதற்காகவும் மற்றொரு போலீஸ் குழு, வீட்டைப் பூட்டிவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு இளைஞனின் தாயை அழைத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ள பெண்ணின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காகவு ஈடுபட்டுள்ளன.
வீட்டைவிட்டு வெளியேறிய இந்த காதல் ஜோடியில், 23 வயதான பெண் கவுண்டர் (ஓ.பி.சி) சமூகத்தைச் சேர்ந்தவர். அவரும் அவருடைய 24 வயது காதலனும் பெங்களூருவில் படித்துவிட்டு வேலை பார்த்தனர்.
இந்த ஜோடி செவ்வாய்க்கிழமை இரவு தப்பிச் சென்றபோது, அவரது குடும்பத்தினர் முதலில் அவர்கள் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
இந்த வழக்கை கண்காணிக்கும் மூத்த அதிகாரி ஒருவர், அந்த பெண் காணாமல் போனதை அவளது பெற்றோர் உணர்ந்தபோது இந்த விவகாரம் தொடங்கியதாகக் கூறினார். “பெண் மற்றும் ஆண் இருவரும் நன்கு படித்தவர்கள் - அந்த இளைஞர் விவசாய அறிவியலில் பட்டதாரி. அவர்கள் அந்த இளைஞனை சந்தேகித்தனர், ஆனால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர், அவர்கள் தங்கள் விரக்தியை அந்த இளைஞனின் தாயிடம் காட்டியுள்ளனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் பக்கத்து கிராமத்தில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு புதன்கிழமை காலை வந்தனர். “தன் மகன் ஓடிவிட்டான் என்பதை அறிந்ததும், அந்த இளைஞனின் தாய் அதிர்ச்சியடைந்தாள். மகனுக்கு போன் செய்ய முயன்றார். ஆனால், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரத்திலேயே நிலைமையை உணர்ந்தார். அதிகம் கவலைப்படாமல், அந்தப் பெண்ணின் பெற்றோர், தங்கள் மகள் அந்த பெண்ணின் மகனுடன் ஓடிப்போனதைப் பற்றி தெரிவித்தனர். மேலும், வன்முறையில் ஈடுபடாமல், அந்த இளைஞனின் தாயைத் தங்களுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.