/indian-express-tamil/media/media_files/uQUMPelqyhiBJMtdzAb3.jpg)
தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி மே 20ஆம் தேதி நடைபெறுகிறது.
Mayiladuthurai | மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் பத்து நாள்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில், பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதினத்தை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதற்கான கொடியேற்று விழா தருமபுரம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்துக்கு எழுந்தருளினர். அங்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியம் முழங்க, ஆலய கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 6-ம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவம், காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை பத்து நாள் உற்சவத்தில் நடைபெறுகிறது.
மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது.
விழா நிறைவாக 30ம் தேதி ஆதீன மடாதிபதி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின்போது மனிதனை மனிதன் சுமப்பதா என திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு தடை செய்ததை தொடர்ந்து, பக்தர்கள் எதிர்ப்பை அடுத்து மீண்டும் அனுமதி வழங்கியது நினைவு கூரத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.