Advertisment

'இவ்வளவு பிரச்சனைக்கும் சசிகலா தான் காரணம்' - திவாகரன் அதிரடி

டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். மேலும் 18 பேரை அதிமுக திரும்ப அழைத்திருப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செயல்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
திவாகரன், சசிகலா, டிடிவி தினகரன்

திவாகரன், சசிகலா, டிடிவி தினகரன்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த 25ம் தேதி வெளியானது. தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு கூறினார்.

Advertisment

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்று 18 எம்எல்ஏக்கள் பெரிதாக நம்பி இருந்தனர். ஆனால் தீர்ப்பு எதிராக வர, டிடிவி உட்பட 18 எம்.எல்.ஏக்களும் அப்செட்.

தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரனை சோர்வடைய செய்தாலும், அதை வெளிக்காட்டாமல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானார்.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் முடிவை தங்கதமிழ்செல்வன் அறிவித்த போது மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளியானது.

இதனால், தனக்கு தான் அதிமுக தொண்டர்கள் ஆதரவு உள்ளது என நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட தினகரன், கருணாஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு நிலை எடுத்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரை ராஜினாமா செய்ய வைத்து அதிரடியாக செயல்பட முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது.

இதையடுத்தே, 'பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து கழகத்தில் இணைய வேண்டும்' என்று இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டாக நேற்று அறிக்கை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

'பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்' - இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டாக அழைப்பு கடிதம்

ஆனால், டிடிவி இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தினகரன் இன்று அளித்த பேட்டியில், "ஜெயலலிதாதான் என்னை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், சசிகலா பொதுச்செயலாளர் ஆனவுடன் என்னை கட்சியில் இணைத்தார். இப்போது 90% தொண்டர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். தோல்வி பயத்தால்தான் இபிஎஸ், ஓபிஎஸ் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். நாங்கள் தேர்தலை சந்திக்க தயார்" எனக் கூறினார்.

சசிகலா செய்த முதல் தவறு - திவாகரன்

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தது தான் சசிகலா செய்த முதல் தவறு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், "டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். மேலும் 18 பேரை அதிமுக திரும்ப அழைத்திருப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செயல். ஆனால் அவர்கள் 18 பேரையும் திரும்ப சேரவிடாமல் யாரோ தடுக்கிறார்கள்.

சசிகலா எடுத்த தவறான முடிவுதான் இப்போது எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் டிடிவி தினகரன் அதிமுகவுடன் சண்டை போடுவதயே செயலாக வைத்திருக்கிறார். மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பீதியை விதைக்க கூடாது எனக்கூறிய அவர், தேர்தல் வந்தால் சந்திக்க வேண்டியது தானே" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ops Eps Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment