மக்கள் நீதி மய்யம் எனும் தனது கட்சியின் அங்கீகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேற்று சென்ற கமல்ஹாசன், தனது வேலையை முடித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்தது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், பேசும் பொருளாக மாறியது. கமல்ஹாசன் உடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து ராகுல் ட்வீட் செய்த போது, இவ்விவகாரம் இன்னும் சற்று சூடு பிடித்தது.
இந்த நிலையில், கமல்ஹாசன் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியை காந்தியை சந்தித்து பேசினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல், "நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தியுடன் எதுவும் பேசவில்லை" என்றார்.
கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும், காங்கிரஸுடன் கமல்ஹாசன் நெருக்கத்தை அதிகரிப்பதன் அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன், ராகுலையும் சோனியாவையும் சந்தித்து பேசினார். அதன்பிறகு, தற்போது மீண்டும் இருவரையும் வீட்டிற்கே சென்று தனித்தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, கமல்ஹாசனின் இந்த செயல்பாடுகளை வேறு விதமாக பார்க்கிறது. இதுகுறித்து திமுகவின் முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், கமல்ஹாசனின் இந்த மூவ்மென்ட்டை 'புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம்' என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கமல், அவரது கட்சி வேலைக்காக டெல்லி சென்றார். அவர் கேஜ்ரிவாலையும் சந்திக்கிறார். அப்படியே ராகுலையும், சோனியா காந்தியையும் சந்தித்து இருக்கிறார். ஒருவரை சந்தித்து பேசுவதனாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. புது கம்பெனி ஆரம்பித்தால் பிராண்ட் விளம்பரம் செய்வது போல், அவர் தனது புதிய கட்சியின் பிராண்ட் விளம்பரத்திற்காக அவர்களை சந்தித்து இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
'புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம் செய்கிறார் கமல்ஹாசன்'! - துரைமுருகன்
சந்தித்து பேசுவதனாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.