நீரிழிவு நோயை காரணமாக கூறி, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான சேர்க்கையில் இடஒதுக்கீடு கோரி மாணவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவி, தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை ஊனமாக கருதி, சேர்க்கையில் இடஒதுக்கீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்த போது, தினமும் இரண்டு முறை இன்சுலின் ஊசி போடுவதால், சிறப்புப் பிரிவில் தன்னை சேர்க்கக்கோரி மனுதாரர் வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வாணையம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாகக் கருதுவது குறித்து மாநில அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும், இதில் தேர்வுக்குழு பங்களிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
இரு சார்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், இந்தப் பிரச்னையில் மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil