/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220807-WA0059.jpg)
மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ - ராம்ப் வாக் மாடல்களுடன், வீல் வாக் செய்து அசத்தல். கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ - ராம்ப் வாக் மாடல்களுடன், வீல் வாக் செய்து அசத்தினர். கோவையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோவை அம்மா சேரிட்டபிள் ட்ரிஸ்ட் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220807-WA0061.jpg)
இந்நிலையில்,மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220807-WA0060.jpg)
இதில் பிரபல நடிகர் பிரதீப் ஜோஸ் மற்றும் சர்வதேச திருமதி அழகி பட்டம் வென்ற சோனாலி பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கென நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ - பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220807-WA0063.jpg)
இதில், தேசிய மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள், பிரபல மாடல் அழகிகளுடன், ராம்ப் வாக் மற்றும் வீல் வாக் செய்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220807-WA0059.jpg)
வண்ண ஒளியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேடையில் தோன்றியது, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
செய்தி: ரஹமான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.