scorecardresearch

கோவையில் மாற்றுத் திறனாளிகள் ஃபேஷன் ஷோ: வண்ண ஒளியில் வீல் வாக்!

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ – ராம்ப் வாக் மாடல்களுடன், வீல் வாக் செய்து அசத்தினர்.

கோவையில் மாற்றுத் திறனாளிகள் ஃபேஷன் ஷோ: வண்ண ஒளியில் வீல் வாக்!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ – ராம்ப் வாக் மாடல்களுடன், வீல் வாக் செய்து அசத்தல். கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ – ராம்ப் வாக் மாடல்களுடன், வீல் வாக் செய்து அசத்தினர். கோவையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து. மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோவை அம்மா சேரிட்டபிள் ட்ரிஸ்ட் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பிரபல நடிகர் பிரதீப் ஜோஸ் மற்றும் சர்வதேச திருமதி அழகி பட்டம் வென்ற சோனாலி பிரதீப் ஆகியோர்  கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கென நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ –  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து.

இதில், தேசிய மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள், பிரபல மாடல் அழகிகளுடன், ராம்ப் வாக் மற்றும் வீல் வாக் செய்தனர்.

வண்ண ஒளியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேடையில் தோன்றியது, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

செய்தி: ரஹமான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Differently abled fashion show in kovai

Best of Express